--- --:--:-- --

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை..! விஜயகாந்த் செய்த விஷயம்

11.1

மிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக படங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவதில்லை.

 

ஆனால், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தொடர்கள் இருவரையும் வருடத்தில் இரு முறையாவது நேரில் சந்தித்துவிடுகிறார். நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார்.

அப்படி ஒரு முறை நடந்த சம்பவம் தான் இது. திரையுலகில் பாடகியும், பிரபல நடிகையுமானவர் தேனி குஞ்சரம்மாள். இவர் மரணடைத்தபோது இவருடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் அவருடைய குடும்பம் தவித்துள்ளது.

 

இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனை அழைத்து, குஞ்சரம்மாள் மரணத்தின் செலவுக்கு இந்த பணத்தை கொடுத்துவிடு என ரூ. 10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.கஷ்டத்தில் இருந்த குஞ்சரம்மாள் குடும்பத்திற்கு விஜயகாந்த் உதவியது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon