--- --:--:-- --

அரசு பேருந்தில் இருந்து கழன்று ஓடிய டயர்..!

8

நெல்லை மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

நெல்லை மாவட்டம் தேவர் குளத்தில் இருந்து நெல்லை டவுன் தற்காலிக பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அரசு பேருந்து நெல்லை ராமையன்பட்டி காவலர் குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் பின் சக்கரம் திடீரென சாலையின் கழன்று ஓடியது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தினார். அரசு பேருந்தில் சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்து விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.

 

புகார் அளித்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.

 

Right Menu Icon