எனது சகோதரரே எனக்கு விஷம் கலந்து கொடுத்தார்..!
தனது சகோதரரே தனக்கு விஷம் கலந்து கொடுத்தார் என்று அதிர்ச்சி தகவலை நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சினிமாவில் வில்லனாக கலக்கிய பொன்னம்பலம் தற்பொழுது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்பொழுது சென்னையில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் அவர் உடல்நலம் தேடி வருகிறார்.
இந்த நேரத்தில் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலர் உடல் நலம் விசாரித்தனர். ஆனால் நடிகர் அஜித் விசாரிக்கவில்லை. அஜித்தை தம்பியாக எண்ணியதை நினைத்து வேதனை அடைந்தார்.





