--- --:--:-- --

இம்ரான் கான் பேச்சை வெளியிட ஊடகங்களுக்கு திடீர் தடை..!

7

ம்ரான் கானின் பேச்சு மற்றும் பேட்டியை செய்தி நிறுவனங்கள் வெளியிட பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களை திரட்டி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

இதற்கிடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் தன்னை தலைமைப் பதவியில் இருந்து நீக்கியதற்கு முன் அவரது பேச்சு நாடு முழுவதும் பல்வேறு செய்தி நிறுவனங்களின் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

 

இந்நிலையில் இம்ரான் கானின் பேச்சு உள்ளிட்டவற்றை ஒளிபரப்ப பாகிஸ்தான் செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை தடை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெறுப்பை தூண்டு வகையில் இம்ரான் பேசி வருகிறார் என்றும் அவரது பேச்சை ஒளிபரப்ப கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

Right Menu Icon