தந்தையின் இரண்டாவது திருமணத்தை நிறுத்திய 10 வயது மகள்..!
பிஹார் மாநிலத்தில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு மணக்கோலத்தில் தயாராக இருந்த தந்தையை 10 வயது மகள் காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மனோஜ் குமார் என்பவர் இவருடைய மனைவி இறந்து விட்டதால் அதை ஊரை சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு தயாரானார். அங்குள்ள கோயிலில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டன.
இதை அறிந்த அவரது 10 வயது மகள் உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்ற முறையிட்டார். தன்னையும் தனது மூன்று உடன் பிறந்தவர்களையும் கவனிக்க வேறு யாரும் இல்லை என்றும் காவல் நிலையத்தில் பதிவு செய்தார். இதையடுத்து திருமணம் நடைபெற்ற பகுதிக்கு வந்தபோது போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இரண்டாவது திருமணம் தயார் ஆனா நிலையில் மனோஜ் குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதாக எழுதி வாங்கிக் கொண்டனர்.






