--- --:--:-- --

இராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா

ff838326-e338-4124-8465-249c3a8ad8b5

இராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் பயிற்சி மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தேசியக் கொடி ஏற்றினார். அமைதி மற்றும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி புறாக்களை பறக்க விட்டார். மூவர்ண பலூன்கள் பறக்க விட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பல்வேறு துறைகளின் சார்பில் 128 பயனாளிகளுக்கு ரூ3,84,80, 214 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்களின் பணியை பாராட்டி 137 பேர், காவல் துறையில் சிறப்பான பணியை பாராட்டி 137 பேருக்கு நற்சான்று வழங்கினார்.

தூய்மை பாரத விழிப்புணர்வு அஞ்சலட்டை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன், கோட்டாட்சியர் சுமன், ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குநர் ஹெட்ஸி லீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon