பிரதமர் மோடியுடன் தமிழக அமைச்சர் உதயநிதி சந்திப்பு..!
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன் பின்னர் இரவு 7 மணியளவில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் இரவில் தங்குகிறார்.





