வீட்டு வேலைக்கு வந்த சிறுமியை கடத்தி திருமணம் செய்த 60 வயது ஆசிரியர்..!
பாகிஸ்தானில் குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்ற பதினைந்து வயது சிறுமியை கடத்தி 60 வயது நபர் இரண்டாவது மனைவியாக கட்டாய திருமணம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் முதல்வராக ஒரு பெண் இருந்து வந்துள்ளார். அவருக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணை வேலைக்கு கேட்டுள்ளார்.
பண தேவையால் வேலைக்கு அனுப்ப அவரது அம்மா முடிவு செய்துள்ளார். ஆனால் அவரது கணவர் சிறுமியை கடத்தி இரண்டாவது மனைவியாக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் இருந்துள்ளார். அதன்படி சிறுமியை கடத்தியவர் கட்டாயத் திருமணமும் செய்துள்ளார்.
வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின் இரண்டு மாதங்களுக்கு பிறகு சிறுமி கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்ட சம்பவம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தை தொடர்ந்து பெண் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் உள்ளது.





