ஜெயலலிதா பிறந்தநாள் : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு செய்தித் துறை செயலர் மற்றும் இயக்குனர் மோகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.





