திரிபுரா காக்கப்பட பாஜக வெற்றி பெறுவது அவசியம் – அமித்ஷா
திரிபுராவை பாதுகாக்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமைவது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகிறார்.
பரப்புரை மேற்கொள்ளும் அமித்ஷா இடதுசாரிகள் பழங்குடியின மக்களுக்கு நீண்ட காலமாக துரோகம் செய்து வருவதாகவும் பழங்குடியின முகம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி மக்களை ஏமாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தீய சக்திகளிடமிருந்து திரிபுரா மாநிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மக்கள் பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 2025 ஆம் ஆண்டுக்குள் திரிபுரா மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.





