ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் வாழ்த்து
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியா முழுவதும் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில் ஜார்கண்ட் மாநில கவர்னராக இருந்த ரமேஷ் பையஸ் மகாராஷ்டிரா மாநில கவர்னராக மாற்றப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த 61 வயதான முன்னாள் மாநில பா.ஜ.க தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில 10-வது கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாநிலத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2015 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் 2 மாதம் ஜார்கண்ட் மாநில கவர்னராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் நாகலாந்து கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். இத்துடன் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை செளந்திரராஜன் பாண்டிச்சேரி கவர்னராக இருப்பதன் மூலம் இந்தியாவில் 3 கவர்னர்கள் பணியாற்றி வருவது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

1957 ஆம் ஆண்டு மே மாதம் 4 ந் தேதி பிறந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 14 வயதில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 2 தடவை கோவை மற்றும் திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மாநில பாஜக தலைவராகவும், 2021 ஆம் ஆண்டு கேரளா சட்டசபை தேர்தலின் போது மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய அரசின் கயிறு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.
இதனையடுத்து திருப்பூரில் ஷெரிப் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், பாஜக பிரமுகர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து சலவை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக கவர்னராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனை குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழ் ஆசிரியர் எம்.கண்ணதாசன் மற்றும் நிருபர் சஃபியுல்லா ஆகியோர் மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.





