--- --:--:-- --

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி..அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது..!

2.1

ளுந்தூர்பேட்டை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 50 பேரிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக அரசு பெண் ஊழியர் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இருவரிடம் மோசடி செய்ததாக புகார் இருந்தது.

 

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சென்னை எழிலகத்தில் மதுவிலக்க துறையில் பணியாற்றி வரும் அஜந்தா மற்றும் வருவாய் பேரிடர் துறையில் பணியாற்றும் அவரது கணவர் அருண்குமார் ஆகியோர் பலரிடம் ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.

 

அரசு ஊழியரான அஜந்தா உட்பட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon