--- --:--:-- --

இடைத்தேர்தலை பார்த்து திமுக பயந்துவிட்டது – அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!

10

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.

 

ஆளும் கட்சி இடைத் தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது தமிழ்நாட்டில் நடந்தது கிடையாது எனவும் இதிலிருந்து திமுக பயந்துள்ளது என தெரிவித்துள்ளதாக அண்ணாமலை கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon