--- --:--:-- --

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையின் இரண்டாவது திருமணம்..!

11

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒருசில படங்களை மக்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட படங்களில் ஒன்று தான் விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம், இப்பட பாடல்கள் எல்லாம் இப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் காதலியாக நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.

 

இவர் அதிகம் மலையாள படங்களில் தான் நடித்துள்ளார்.
தமிழ் என்று எடுத்தால் பூவே உனக்காக, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், வானத்தை போல என கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

 

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சில படங்களும் நடித்துள்ளார்.தேவதாஸ் என்பவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்த அஞ்சு அவரை 2004ம் ஆண்டே விவாகரத்து செய்துள்ளார். பின் 2006ம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon