அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள தாமதமானதால் ஏற்பட்ட சிரமம்..!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள தாமதமானதால் நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களின் பலர் சோர்வடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நரிக்குறவர் சுய உதவி குழு வணிக வளாகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால் நிகழ்ச்சி தொடங்க தாமதமானது. நிகழ்ச்சி தொடங்க தாமதமானதால் அங்கு திரண்டு இருந்தபோது மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பலர் அமர்ந்திருந்த இடங்களிலேயே முடங்கினார். மேலும் சில ஸ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் சாலையில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டதால் வாகன நெருக்கடி ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





