தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரிப்பு..!
தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 சதவீத தொகையை சுகாதாரத் துறைக்கு ஒதுக்குவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு மாநில அரசுகளின் அளவு குறித்த விபரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டது.
மத்திய பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான ஒதுக்கீடு 6 ஆண்டுகளில் 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
2017 – 2018 இல் 47,353 கோடி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 2023- 2024 இல் 86,175 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நான்காண்டுகளில் மொத்த மாநில பட்ஜெட் செலவினத்தை ஆண்டுதோறும் 4.8% முதல் 5.9% வரை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





