நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வந்த ஆடை..!
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிறத்தினால் ஆன அந்த ஆடை சுத்திகரிக்கப்பட்ட காலி நெகிழி பாட்டில்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பது தான் அந்த கவன ஈர்ப்புக்கு காரணம்.
கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி தொடர்பான மாநாட்டில் இந்திய நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சுத்திகரிக்கப்பட்ட நெகிழி பொருட்களால் ஆன ஆடையை பரிசளித்திருந்தது.
பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட 10 கோடி நெகிழி பாட்டில்களை இந்தியன் ஆயில் நிறுவனம் சுத்திகரித்து ஆடை செய்து அவற்றை தங்கள் ஊழியர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





