--- --:--:-- --

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

7

தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை நிலவக்கூடும் என்றும் கூறியுள்ளனர். வளைகுடா பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருகிறது என்றும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

இன்று குமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் எனவும் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாகவும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon