பன்முகத்தன்மை கொண்ட பழம்பெரும் கலைஞர் விஸ்வநாத் மறைவு..!
தாதா சாகிப் பால்கே விருது பெற்ற பழம்பெரும் கலைஞர் விஸ்வநாத் காலமானார். அவருக்கு வயது 92. கே. விஸ்வநாத் இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். சங்கராபரணம், சலங்கை ஒலிப்பு உட்பட 59 படங்களை இயக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அதிகம் இயங்கினாலும் இந்தியாவின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக கருதப்பட்டவர் கே விஸ்வநாத். தனது படங்கள் மூலம் சாதியை ஏற்றத்தாழ்வுகள் பெண்ணுரிமை குறித்து பேசி உள்ளார்.
தமிழில் முகவரி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 5 தேசிய விருதுகள், 7 நந்தி விருதுகளை பெற்றவர். ஹைதராபாத்தில் வசித்து வந்த இயக்குனருக்கு வயது முதிர்வால் காலமானார். அவரது மறைவால் திரையுலகத்தினர் ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





