--- --:--:-- --

பிரபல திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்..!

4

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டர் தண்ணீர் தொட்டிக்குள் திரையரங்கு எலக்ட்ரீசியன் வெங்கடேச பெருமாள் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தண்ணீர் தொட்டியை சோதனை செய்த பொழுது அழுகிய நிலையில் ஆன் சடலம் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 26 ஆம் தேதி தண்ணீர் தொட்டியில் உள்ள மோட்டாரை இயக்கும் பணியில் ஈடுபட்டார்.

 

மோட்டாரை இயக்கும் போது எலக்ட்ரீசியன் வெங்கடேச பெருமாள் தவறி விழுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி காணாமல் போனவரை இதுவரையில் தேடாதது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon