இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக தேர்தல் பணி குழுவை அமைத்துள்ளது. இடைத்தேர்தல் ஒருங்கிணைக்கவும் கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.






