கணவனை கத்தியால் குத்தி வீட்டிலேயே சிகிச்சை பார்த்த மனைவி..!
சென்னையில் மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியான வினோதினியுடன் தகராறு செய்வதுடன் அநாகரிமான முறையில் நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி வழக்கம் போல தகராறு செய்த கண ஆத்திரமடைந்த வினோதினி வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் இரண்டு முறை குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த கணவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் தகவலின் பெயரில் வந்த போலீசார் நடத்தியதில் வினோதினி கத்தியால் குத்தியது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






