பிரதமர் காரை நோக்கி பாய்ந்த இளைஞரால் பரபரப்பு..!
கர்நாடகாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு காரில் வந்த பிரதமர் மோடியை நோக்கி இளைஞர் ஒருவர் மாலையுடன் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திறந்த காரில் 2023 ஆம் ஆண்டுக்கான 26வது தேசிய இளைஞர் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி திறந்த காரில் சாலை வெளியே பேரணியாக பயணித்தார்.
அவருக்கு வழி நெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அவரோடு பாதுகாப்பிலிருந்து உயர் அதிகாரிகளும் உடன் சென்றனர். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பை மீறி பேரணியின் நடுவே இளைஞர் ஒருவர் திடீரென மாலையுடன் பிரதமரை நோக்கி பாய்ந்து சென்றுள்ளார்.
இதனை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். எனினும் அவரது மாலையை பிரதமர் மோடி வாங்கிக் கொண்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






