தமிழ் பாடம் சரியாக வரவில்லை.. பெற்றோரிடம் கதறி அழுத மாணவி விபரீத முடிவு..!
தமிழ் பாடம் சரியாக வராததால் சென்னையில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்று ஆங்கிலத் தேர்வு எழுதிய நிலையில் அதன் பின்பு பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. தொலைபேசியில் அழைத்து கேட்டபோது உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ் பாட தேர்வு நடைபெற இருந்த நிலையில் மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பெயரில் வந்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் தமிழ் பாடத்தில் பலவீனமாக இருப்பதாக கூறி பெற்றோரிடம் மாணவி கூறி அழுதுள்ளார். அப்பொழுது அவரைப் பெற்றோர் ஆறுதல் படுத்தியதாக சொல்லப்படுகிறது. எனினும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






