குடியரசு தலைவரை இன்று சந்திக்கிறது தமிழ்நாடு அரசு குழு..!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் இன்று சந்தித்து முறையிட உள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் ஒரு சில பகுதிகளை ஆளுநர் படிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து ஆளுநர் அவைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறினார். தேசிய கீதம் பாடப்பட்டு முடிவதற்குள் ஆளுநர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம், சபை விதிமுறைகள் மீறிய செயல் என குற்றம் சாட்சி வரும் திமுக குடியரசுத் தலைவரிடம் புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளது.





