அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று விசாரணை..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி – கல்யாணசுந்தரம் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அவர்கள் முன் விசாரணைக்கு வருகிறது. 2022 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது ஒரு சமூக குழு மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழல் உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் உள்ளடக்கிய கமிட்டியை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.





