வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது..!
வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, சீனா, கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





