ஆளுநர் ஆர்.என்.ரவியின் இரட்டை பதவி வழக்கு இன்று தீர்ப்பு..!
ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக ஆளுநர் ரவி ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக்குழு தலைவராகவும் இருக்கிறார். இதனால் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதால் எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீட்டிக்கிறார் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடித்தால் ஆளுநரை தகுதி நீக்கம் செய்யலாம் எனவும் வாதிடப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்து இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளனர்.






