மருத்துவர் அலட்சியத்தால் பெண்ணின் பார்வை பறிபோனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்..!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நுழைவு வாயிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுமதி இன்றி நடத்திய முற்றுகை போராட்டத்தால் நோயாளிகளும், பொதுமக்களும் மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த சத்யா என்ற பெண்மணிக்கு அடுத்த 5வது நாளில் கண்ணில் வீக்கம் ஏற்பட்டு நரம்பியல் ஊசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பார்வை பறிபோனதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.






