வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனத்தினை வாட்டர் வாஷ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்த இளைஞர் தண்ணீரை பீய்ச்சி அடித்து இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்த பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்து உயிரிழக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி துடிதுடித்து அவர் இறந்து போகின்றார். மின்சார தாக்குதலுக்கு பின் சற்று எழுந்த நிலையில் மீண்டும் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.






