உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் உடல் நலக்குறைவால் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழிலில் இருந்து வந்தார். இவர் உடலை குறைப்பதற்காக தனியார் நிறுவனம் வழங்கிய மருந்துகளை வாங்கி 10 நாட்களாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாமல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.






