--- --:--:-- --

கல்லூரியிலேயே மாணவி குத்தி கொலை..தானும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கும் முயற்சி..!

9

பெங்களூருவில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரை சேர்ந்த பெண் தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார்.

 

தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவரும் பவன் கல்யாண் என்ற இளைஞர் அவரை சந்திக்க கல்லூரிக்கு வந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை பவன் கல்யாண் குத்தி கொலை செய்தார்.

 

பின்னர் அவரும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Right Menu Icon