நூறு வயது ஹீரா பென்னின் அற்புத வாழ்க்கை இறைவனின் பாதம் சேர்ந்தது..!
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் தனது நூறாவது வயதில் காலமானார். குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடனடியாக உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஹீராபென் உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.
தனது தாயின் மறைவு குறித்து ட்விட்டரில் நரேந்திர மோடி அறிவித்தார். நூற்றாண்டு அற்புத வாழ்க்கை இறைவனின் பாதங்களை அடைந்ததாக உருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் தனது தாயாரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஹீராபென் மறைந்ததால் அவரது இறுதி சடங்குகளில் பங்கேற்க பிரதமர் மோடி அகமதாபாத் சென்றார். பின் அவரது உடலை சுமந்து சென்றார். இதையடுத்து ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் காணொளி முறையில் பிரதமர் கலந்து கொள்வார் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே பிரதமரின் தாய் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.





