--- --:--:-- --

பஞ்ச தந்திரம் பட புகழ் நடிகர் திடீர் மரணம்!

13

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படங்களில் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் பஞ்ச தந்திரம். குடும்பம், காமெடி, காதல், கலாட்டா என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் இருக்கும்.அதிலும் கிரேஸி மோகனின் வசனங்கள் குறித்து சொல்லவே வேண்டாம், அவர் இப்போது இல்லையே என்ற வருத்தம் தான் மக்களிடம் உள்ளது.

 

இந்த படத்தில் சஞ்சீவ் ரெட்டி என்ற சின்ன வேடத்தில் நடித்தவர் கைகாலா சத்தியநாராயணா. 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பஞ்ச தந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். புகழ்பெற்ற தெலுங்கு நடிகரான இவர் உடல்நலக் குறைவால் காலமானார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon