--- --:--:-- --

தாறுமாறாக ஆட்டோ ஓட்டியவரை தட்டி கேட்ட இளம்பெண்களை கீழே தள்ளிவிட்ட ஓட்டுநர்..!

5

சேலம் மாநகரின் பிரதான சாலை ஒன்றில் தாறுமாறாக துளியும் பொறுமையற்ற முறையில் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரை இருசக்கர வாகனத்தில் சென்று இரு பெண்கள் கை நீட்டி சத்தம் போட்டு தவறை தட்டி கேட்டுள்ளனர்.

 

இதனால் கோபம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்களை துரத்தி சென்று அவர்களை வழி மறித்துள்ளார். பின்பு அந்த இரு பெண்களிடமும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிகவும் ஆபாசமாக பேசியுள்ளார் என தெரிகிறது.

 

பின்பு அந்த பெண்களை செல்ல விடாமல் தடுத்துள்ளார் அந்த ஆட்டோ ஓட்டுனர். இதனை மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த இரு பெண்களையும் ஆத்திரம் அடங்காமல் துரத்தி சென்றார் அந்த ஆட்டோ ஓட்டுநர். இதனை மற்ற வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்தபடி பின் தொடர்ந்து உள்ளார்.

 

ஆட்டோ ஓட்டுனர் மின்னல் வேகத்தில் அந்த பெண்களை பின் தொடர்ந்து ஆட்டோவை இயக்கி அந்த பெண்களின் மீது மோதியுள்ளார். மேலும் அந்த பெண்களை கீழே தள்ளி மின்னல் வேகத்தில் மறைந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இது போன்ற மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon