சுடுகாட்டிற்கு போக பாலம் இல்லாமல் சடலத்தை வாய்க்கால் வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மயானத்திற்கு செல்ல பாலம் இல்லாததால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். வேலூர் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு நடுவில் பாசன வாய்க்கால் உள்ளது.
இதனால் மழைக்காலங்களில் ஆபத்தான முறையில் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டி இருந்ததாக அந்த பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்து தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





