--- --:--:-- --

பிரபல தமிழ் சினிமா இயக்குனரை ரகசிய திருமணம் செய்தாரா நடிகை தன்யா

12

மிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான ரோல்களில் நடித்து வந்தவர் தன்யா பாலகிருஷ்ணன். கடந்த 2011ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார்.

 

தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார். ஆனால் கொரோனாவிற்கு பிறகு தன்யாவை படங்கள் பக்கம் காண முடியவில்லை.

 

இந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon