குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கும் அரசு..!
ஜப்பானில் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க நாடு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தென்கொரியாவை போன்று ஜப்பானிலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் நாட்டு மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கவில்லை.
இதனால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 42 ஆயிரம் ரூபாய் வழங்க நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளது.
ஏற்கனவே குழந்தை பிறந்த பிறகு இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் இரண்டு லட்சத்தை 52 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு நிதி ஆண்டு முதல் அமல்படுத்த ஜப்பான் அரசு முடிவு எடுத்துள்ளது.
ஜப்பானில் பொருளாதார பற்றாக்குறை, உறுதி தன்மையற்ற வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக் கொள்வதில் நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





