--- --:--:-- --

சிறுவயதில் என்னை சிலர் தவறாக தொட்டனர்..பிரபல நடிகை பரபரப்பு பேட்டி..!

21

கமே ஐந்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

 

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேசி உள்ளார். அதில் அவர், ” படத்தின் ஷட்டிங் போது என்னை ஒருத்தர் தவறாக தொட்டார், அப்போதே அவரை பிடித்து அடித்து விட்டேன்.

 

எப்போது இந்த மாதிரியான பிரச்சனைகள் முடியும் என்று தெரியவில்லை. இந்த மாதிரியான சம்பவங்களின் போது பெண்கள் பயந்து ஒதுங்க கூடாது திருப்பி அவர்களை அடிக்க வேண்டும்.

 

இப்பொது என்னிடம் தவறாக நெருங்கினாள் அதை எனக்கு புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் அவர்களை திருப்பி அடிக்க தைரியமும் உள்ளது. ஆனால், சிறுவயதில் எனக்கும் பேட் டச் சம்பவங்கள் நடந்துள்ளது.

 

கார்கி படத்தில் இது போன்ற சம்பவங்களை பற்றி பேசியிருப்பது சமூகத்திற்கு தேவை. குழந்தைகளுக்கு நெருக்கமானவர்களே தவறாக தொடுவது, அவர்களை துன்புறுத்துவது போன்ற கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கிறது.ஆனால் பெண்கள் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இருக்கவேண்டு, உடனடியாக பெற்றோர்களிடம் எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் “ என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon