--- --:--:-- --

புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டுவதாக புகாரளித்த நடிகை..!

4

புகைப்படத்தை வெளியிட்டு மிரட்டுவதாக நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரில் அவரின் முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டார். தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், என்கிட்ட மோதாதே, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

 

சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டில் இருந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் மற்றும் ஐபோன் ஆகியவை திருட்டு போய்விட்டதாகவும் தனது வீட்டு உதவியாளர் சுபாஷ் சந்திர போஸ் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார்.

 

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நடிகை பார்வதி வீட்டில் பணியாற்றிய முன்னாள் உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீசார் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon