கனமழை முன்னெச்சரிக்கை: தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை வெளியிட்டு இருக்கிறார். வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்தத்தால் இன்று பலத்த முதல் பலத்த காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





