மதுரை மத்திய சிறையில் ஊழல் புகார்..12 அலுவலர்கள் பணியிடை மாற்றம் ..!
மதுரை மத்திய சிறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் நடைபெற்ற விசாரணையில் 12 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பாண்டேஜ், கவர், பேட்டரி, பொருட்கள், பூந்தொட்டி, மரக்கன்று உள்ளிட்டவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைத்துறை டிஜிபி சிறைச்சாலையை நேரில் ஆய்வு நடத்தி இருந்தார். இந்த பின்னணியில் மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 12 அலுவலர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





