--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் இரவு காவலர் சிகிச்சை அளிக்கும் காட்சி..!

13

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரவு காவலர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த காணொளி வேகமாக பரவி வருகிறது. சாரங்கபாணி என்பவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அப்பொழுது இரவு காவலராக பணியாற்றும் சுரேஷ் என்பவர் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றி இருந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

இதுகுறித்து மருத்துவ அலுவலர் ஷர்மலா தேவியை கேட்ட பொழுது, இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon