ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்..!
கூடலூரில் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாணவ, மாணவிகள் பெரும்பாலும் அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில்
சிலர் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பேருந்தை கூடுதலாக இயக்க அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





