எதிர்ப்பை மீறி காதலித்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை..!
திருப்பதி அருகே எதிர்ப்பை மீறி காதலித்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை நான்கு மாதங்களுக்கு பின் போலீசில் சிக்கியுள்ளார். சந்திரகிரியை சேர்ந்த முனி ராஜா என்பவரது 19 வயதான மகள் மோகன கிருஷ்ணா உறவினரின் இல்லத்தில் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தொலைதூரக் கல்வி மூலம் பிளஸ் டூ பயின்று வந்தவர் நாங்குநேரி பள்ளியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். தனது மகள் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்ததை தாங்க முடியாத அவர் தனது மகள் காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டால் தனது மானம் போகுமோ என எண்ணி கடந்த ஜூலை 7ஆம் தேதி மோகன கிருஷ்ணாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்துள்ளார். சமீபத்திய உடற்கூறு ஆய்வின் படிகொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தந்தை முனிராஜாவை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





