ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்த நபர் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு..!
புதுடெல்லியில் ஹேர் டிரான்ஸ்பிளான்ட் செய்த 30 வயது நபர் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அப்துல் ரஷீத் திருமணத்திற்காக கடந்த ஆண்டு முடிமாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அப்பொழுது ஏற்பட்ட காயங்கள் குணமாகாமல் அழுகி ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து சிறுநீரகங்கள் உட்பட ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து அர்த்தர் ரஷீத் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மருத்துவர்களால் மயக்க மருந்து அளிக்கப்பட்டு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை கூட அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சையை சில போலி ஆசாமிகள் youtube யை பார்த்து குறைவான செலவில் செய்வதாக கூறுவதை நம்பி ஏமாறுவதால் இதுபோன்ற பாடல்கள் நேர்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





