--- --:--:-- --

20 அடி உயரத்தில் ஏறி போராடிய போதை நபர்..!

7

சென்னை திருவொற்றியூரில் மதுபாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

 

திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நடைபாதைக்காக அமைக்கப்பட்டிருக்கும் 20 அடி உயரத்தின் மேலே இருந்து இரும்பு கம்பியில் இளைஞர் ஒருவர் அமர்ந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் கொடுத்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது அவர் மது பாட்டிலை கேட்டதால் அதனை வாங்கி கொடுத்தும் கீழே இறங்கவில்லை. இந்நிலையில் திடீரென போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்த கம்பியினுள் ஏறி குதித்து அந்த இளைஞரை லாவகமாக பிடித்து பத்திரமாக கீழே இறக்கினார்.

 

Right Menu Icon