--- --:--:-- --

1965 முதல் 2000 ஆம் ஆண்டு வரை படித்த ஜெய்வாபாய் பள்ளி முன்னாள் மாணவிகள் சந்திப்பு: வாழ்த்துக்களை தெரிவித்து பாச பரிமாற்றம்!

89f94aca-65b6-46f0-a247-970a48368cb9

திருப்பூர் ஜெய்வாபாய் நகரவை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்து சென்ற மாணவிகள் ஒன்றிணைந்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெய்வாபாய் முன்னாள் மாணவிகள் அறக்கட்டளை (ஜெ.எப் எஸ் அறக்கட்டளை) தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். தற்போது இதில் தலைவராக பார்த்திபா மற்றும் செயலாளர், பொருளாளர், 12 அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட 40 உறுப்பினர்கள் உள்ளனர். இத்துடன் 32 வாட்ஸ் அப் குருப்புகளில் 1500 க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

 

ஜெய்வாபாய் முன்னாள் மாணவிகள் அறக்கட்டளை சார்பில் கலந்தாய்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி தலைமை தாங்கி பேசினார். அப்போது பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மாணவிகளின் கல்வி திறன் குறித்தும் பள்ளியின் முன்னேற்றம் குறித்தும் விளக்கி பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெ.எப் எஸ் அறக்கட்டளை தலைவர் பார்த்திபா வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மாணவிகள் பெங்களூரு, கும்பகோணம், சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டும், செல்ஃபீ மற்றும் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் முத்தமிழ்செல்வன் மேலாண்மை குழு செயல்படும்விதம் குறித்தும், முன்னாள் மாணவிகள் அறக்கட்டளையினர் தங்கள் குழுக்களுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பும் விடுத்தார். பின்னர் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வசந்தகுமாரி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஈஸ்வரன் மற்றும் ஜெ.எப் எஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தாமரை, கிளாடி அலெக்ஸ், துளசி, உமா, பூவிழி, மோகனரஞ்சனி ஆகியோர் பேசினார்கள். முடிவில் முன்னாள் கவுன்சிலர் ருக்குமணி நன்றி கூறினார்.

 

கூட்டத்தில் “நம் பள்ளிக்கு நம் பங்களிப்பு”, “நமக்கு நாமே “.என்னும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவது. பள்ளி மற்றும் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது. படிப்பு முடித்து வெளியே செல்லும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவது. குரூப்பில் உள்ளவர்கள் மற்றும் 1965 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு பள்ளியில் படித்து வெளியே சென்ற மாணவிகளை அழைத்து அவர்களை புதிய உறுப்பினராக சேர்ப்பது, விரைவில் புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுத்து, உறுப்பினர்களின் ஆலோசனையில் பேரில் செயல்படுவது ஆகிய தீர்மான்ங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு பார்த்திபா- 96777 89500, பூவிழி.- 99658 19999 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon