காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு..!
காலம் காலமாக காசிக்கும் தமிழுக்கும் இருக்கும் இணைப்பை புதுப்பித்த பிரதமர் மோடிக்கு தன்னுடைய நன்றியை தெரிவிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
வாரணாசியில் நடைப்பெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார். பின்னர் காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழிசை வழிபட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். கலைகளில் கூட காசிக்கும் தமிழுக்கும் ஒற்றுமை இருப்பதை இங்கு காண முடிவதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





