அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
அரசு பணி நியமனங்களின் பொழுது தேர்வு விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என எச்சரித்துள்ளது.
பொதுப்பணி துறையில் பத்தாயிரம் பேரை சட்டவிரோதமாக பணிய அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் அரசு பணியில் எந்த சூழ்நிலையிலும் முறைகேட்டை அனுமதிக்க முடியாது எனவும் அரசியல் சட்ட விதிகளை பின்பற்றி அனைத்து நியமனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
வெளிப்படை தன்மை உடன் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





